/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்பெட்டிகள் எர்ணாவூரை கண்டுகொள்ளாத வாரிய அதிகாரிகள்
/
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்பெட்டிகள் எர்ணாவூரை கண்டுகொள்ளாத வாரிய அதிகாரிகள்
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்பெட்டிகள் எர்ணாவூரை கண்டுகொள்ளாத வாரிய அதிகாரிகள்
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்பெட்டிகள் எர்ணாவூரை கண்டுகொள்ளாத வாரிய அதிகாரிகள்
ADDED : ஜூலை 18, 2024 12:12 AM

எண்ணுார் :எண்ணுார் அடுத்த எர்ணாவூரில், மகாளியம்மன் கோவில் தெரு, எர்ணீஸ்வரர் நகர், காந்தி நகர், காமராஜர் நகர் என, 20க்கும் மேற்பட்ட நகர்களில், 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அரசு உயர்நிலைப் பள்ளி, மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், நகர்ப்புற நல வாழ்வு மையம் ஆகியவை செயல்படும், எர்ணாவூர் - மகாளியம்மன் கோவில் தெருவில், மின்பெட்டிகள் திறந்த நிலையில் அபாயகரமான வகையில் உள்ளன.
இந்த மின் பெட்டிகள், சிறுவர்கள், குழந்தைகள் கைகளுக்கு எட்டும் உயரத்திலேயே உள்ளன. அபாயகரமான மின்பெட்டிகளும், கான்கிரீட் போட்டு சரியாக பொருத்தப்படாமல் உள்ளது.
இதனால், காற்றுக்கு சரிந்து விழுந்து விடாமல் இருக்க, சணல் கயிறுகள் போட்டு அலட்சியமான முறையில் கட்டி வைக்கப்பட்டுள்ளன. தவிர, புதை மின்வடங்கள், சரிவர புதைக்கப்படாமல், சாலையோரத்தில் மலைப்பாம்பு சுழன்று படுத்துள்ளது போன்று கண்டமேனிக்கு கிடக்கின்றன.
மேலும், ஆங்காங்கே பழுது ஏற்பட்டு ஒட்டு போடப்பட்டுள்ளன. இதனால், பாதசாரிகள் பீதியுடனே அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
மழை நேரங்களில், நிலைமை அபாயகரமாக உள்ளது. நாய், பூனை மற்றும் கால்நடைகள், இந்த மின்பெட்டியில் சிக்கி, அப்போது, உயிரிழப்பு ஏற்படுகின்றன.
பெரிய அளவில் மனித உயிர்பலி ஏற்படும் முன், அலட்சியமாக செயல்படும் மின்வாரியம், மின்பெட்டிகளை உயர்த்தி, தரமான முறையில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
எர்ணாவூர் முழுதும் இதே நிலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.