/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் பலி
/
நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் பலி
ADDED : செப் 03, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு பங்களா வீட்டில் குடும்பத்துடன் தங்கி கார் ஓட்டி வருபவர் சுகுமார். இவரது மகன் ரித்தீஷ், 3.
நேற்று இரவு 8:45 மணிக்கு, வீட்டின் வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக அங்குள்ள நீச்சல் குளத்தில் விழுந்தார்.
குழந்தையை மீட்டு, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவசரசிகிச்சை பிரிவு இல்லாததால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. இதுகுறித்து, நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.