ADDED : மே 11, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர், செய்யூர், பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன், 52. நேற்று காலை 7:30 மணிக்கு, லோகநாதன் கழுத்துப் பகுதியில் நகக்கீறல்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
போலீசாரின் விசாரணையில், லோகநாதனின் தம்பி பூபாலன் என்பவரின், 16 வயது மகன் கொலை செய்தது தெரிந்து, அவனை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
நேற்று முன்தினம் இரவு, மது போதையில் இருந்த சிறுவன், லோகநாதன் கொட்டகைக்குள் ஆடு திருட நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த லோகநாதன், ஆடு திருட வந்த தன் தம்பி மகனை கண்டு, அவனை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், லோகநாதனை சரமாரியாக தாக்கி, தப்பி சென்றுள்ளான். இதில் லோகநாதன் இறந்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.