/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன்தொட்டிக்குள் கை வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி
/
மீன்தொட்டிக்குள் கை வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி
மீன்தொட்டிக்குள் கை வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி
மீன்தொட்டிக்குள் கை வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : ஜூன் 02, 2024 12:25 AM
பழவேற்காடு, பழவேற்காடு, பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 34; மீனவர். இவரது மகன் ஹரிஷ், 8. நேற்று காலை மணிகண்டனும், அவரது மனைவியும், பழவேற்காடு பஜார் பகுதிக்கு சென்றனர். ஹரிஷ், தங்கையுடன் வீட்டில் இருந்தார்.
வீட்டில் கண்ணாடித்தொட்டியில் வண்ண மீன்களை வளர்த்து வரும் ஹரிஷ், அவற்றிற்கு இரை போடுவதற்காக தொட்டியின் உள்ளே கை வைத்தார். அங்கு, மீன்களின் ஆக்சிஜன் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டாரில் தெரியாமல் கை பட்டது. அதில், மின்கசிவு இருந்ததால், ஹரிஷ் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் ஹரிஷை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.