/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பை - பாஸ் தடுப்பில் மோதி சர்வீஸ் சாலையில் பாய்ந்த பஸ்
/
பை - பாஸ் தடுப்பில் மோதி சர்வீஸ் சாலையில் பாய்ந்த பஸ்
பை - பாஸ் தடுப்பில் மோதி சர்வீஸ் சாலையில் பாய்ந்த பஸ்
பை - பாஸ் தடுப்பில் மோதி சர்வீஸ் சாலையில் பாய்ந்த பஸ்
ADDED : செப் 17, 2024 12:37 AM

ஆட்டோவில் மோதி ஒருவர் பலி; 10 பேர் காயம்
மதுரவாயல், செப். 17-
சென்னையில் செங்குன்றம் - தாம்பரம் நோக்கி செல்லும், தடம் எண்: 104 மாநகர பேருந்து, நேற்று மாலை 40க்கும் மேற்பட்ட பயணியருடன், மதுரவாயல் வழியாக தாம்பரம் நோக்கி சென்றது.
பேருந்தில், தாம்பரத்தைச் சேர்ந்த ஓட்டுனர் ஆரோக்கிய ராஜேஷ், 42; நடத்துனர் சரவணன், 40, பணியில் இருந்தனர்.
மதுரவாயல் பை - பாஸ் சாலையில், வானகரம் ஓடமா நகர் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.
அதை உடைத்து, சாலையோர மரத்தின் மீது மோதி 15 அடி உயரத்தில் இருந்து அணுகு சாலையில் பாய்ந்தது. அதேசமயம், அணுகுசாலையின் எதிர் திசையில் வந்த ஆட்டோ மீது மோதி, சிறிது துாரம் இழுத்து சென்றது.
ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணியர் காயமடைந்தனர். பஸ் ஓட்டுனர் ஆரோக்கிய ராஜேஷும் காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விசாரணையில், ஆட்டோ ஓட்டுனர் மாதவரம், மாரியம்மன் கோவிலை சேர்ந்த தினேஷ், 43, என்பது தெரிந்தது. ஓட்டுனர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த விபத்தால், தாம்பரம் பாதையில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல, அணுகு சாலையிலும் நெரிசல் ஏற்பட்டது.