/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சவுடுமண் ஏற்றிய லாரி சிறைபிடிப்பு
/
சவுடுமண் ஏற்றிய லாரி சிறைபிடிப்பு
ADDED : மே 09, 2024 12:20 AM
வில்லிவாக்கம்,
வில்லிவாக்கம் சிட்கோ நகரில், சென்னை மாநகராட்சி,'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கண்ணாடி பாலம், சிறுவர் விளையாட்டு திடல் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பூங்காவில் இருந்து, அனுமதியின்றி சவுடுமண் அள்ளப்படுவதாகக் கூறி, அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
நேற்று இரவு, சவுடு மண் ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அரசு பணிகள் நடைபெறும் பூங்காவில் இருந்து உரிய அனுமதியுடன் மண் எடுத்துச் செல்லப்படுகிறதா அல்லது அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்கிறார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.