/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமுடிவாக்கம் தொழில் கண்காட்சிக்கு வரவேற்பு நம்பிக்கை அளிப்பதாக நிறுவனத்தினர் உற்சாகம்
/
திருமுடிவாக்கம் தொழில் கண்காட்சிக்கு வரவேற்பு நம்பிக்கை அளிப்பதாக நிறுவனத்தினர் உற்சாகம்
திருமுடிவாக்கம் தொழில் கண்காட்சிக்கு வரவேற்பு நம்பிக்கை அளிப்பதாக நிறுவனத்தினர் உற்சாகம்
திருமுடிவாக்கம் தொழில் கண்காட்சிக்கு வரவேற்பு நம்பிக்கை அளிப்பதாக நிறுவனத்தினர் உற்சாகம்
ADDED : ஆக 09, 2024 12:46 AM

குன்றத்துார்,
தமிழக அரசின் 'சிட்கோ' எனும் தொழில் வளர்ச்சி நிறுவன தொழிற்பேட்டை, குன்றத்துார் அடுத்த தொழிற்பேட்டையில் உள்ளது. இங்குள்ள, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தொழிற்பேட்டை வளாகத்தில் 'டெக்ஸ்போ - 2024' என்ற மூன்று நாள் தொழிற்கண்காட்சி, நேற்று முன்தினம் துவங்கியது.
மொத்தம் 184 உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்று, தாங்கள் தயாரித்த வாகன உதிரிபாகங்கள், ஆட்டோ மொபைல், தோல் பதனிடல், மருத்துவ உபகரணங்கள், பிளாஸ்டிக் மோல்டிங் பொருட்களை காட்சிப்படுத்தின.
இரண்டாம் நாளான நேற்றும், கண்காட்சி நடந்தது. தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என பலர், ஆர்வத்துடன் கண்காட்சி வந்து தகவலை கேட்டறிந்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த உற்பத்தி பொருட்களை வாங்குவதற்கு, பல நிறுவனங்கள் முன்வந்ததால், நிறுவனத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர்
இது குறித்து, டெக்போ கண்காட்சி துணைத்தலைவர் எஸ்.கந்தசாமி கூறியதாவது:
இரண்டு நாட்களில் 4,000 பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். 'ஹூண்டாய், லுாகாஸ் டி.வி.எஸ்., ராணிமெட்ராஸ், மதர்சன்' உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் முதல் நடுத்தரம் வரை, 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்ய பல நிறுவனத்தினர் முன்வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வணிக வாய்ப்பு
திருமுடிவாக்கம் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, மற்ற பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், இந்த கண்காட்சி உதவிகரமாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறியும் வகையில் கண்காட்சி இருந்தது. வணிக வாய்ப்புக்கான சிறந்த தளமாக கண்காட்சி அமைந்துள்ளது.
-எம்.உதயகுமார்,
நிர்வாக இயக்குனர்,
'கே2 கிரேன்ஸ்' நிறுவனம், திருமுடிவாக்கம்
இணைப்பு பாலம்
இன்ஜினியரிங் பாலிபர் பிளாஸ்ட்ரா மெட்டீரியலை தயாரிக்கிறோம். இவை, ஆட்டோமோடிவ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதிகம் செல்கிறது. கண்காட்சியில் பங்கேற்றதால் தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு குறித்து அறிய முடிகிறது. எங்களது புதிய உற்பத்தி பொருட்களை, புதியவர்கள் பலர் அறிந்து கொள்கின்றனர். நுகர்வோர், சேவையாளர்களை இணைக்கும் இடமாக கண்காட்சி உள்ளது.
கே.பிரபாகர்,
லியோ இம்பெக்ஸ் நிறுவனம்
சிறப்பாக உள்ளது
'ஆட்டோமோடிவ், ஏரோஸ்பேஸ்'க்கு தேவையான இன்ஜினியரிங் பாலிமர்ஸ் தயாரித்து, ஏற்றுமதி செய்தும் வருகிறோம். ஒரே இடத்தில், எங்கள் உற்பத்தி பொருட்கள் குறித்து எளிதாக மார்க்கெட்டிங் செய்ய முடிகிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு, கண்காட்சி சிறப்பாக அமைந்துள்ளது.
எஸ்.செந்தில்குமார்,
நிர்வாக இயக்குனர்,
வின்டெர் பாலிசால் நிறுவனம்.