/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி குப்பையை கொட்ட இடம் மண்டலம்தோறும் தயார் செய்ய உத்தரவு
/
மாநகராட்சி குப்பையை கொட்ட இடம் மண்டலம்தோறும் தயார் செய்ய உத்தரவு
மாநகராட்சி குப்பையை கொட்ட இடம் மண்டலம்தோறும் தயார் செய்ய உத்தரவு
மாநகராட்சி குப்பையை கொட்ட இடம் மண்டலம்தோறும் தயார் செய்ய உத்தரவு
ADDED : செப் 18, 2024 12:24 AM

தாம்பரம்,
தாம்பரம் மாநகராட்சி, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளை உடையது. நாள் ஒன்றுக்கு, 400 டன் குப்பை சேகரமாகிறது. இவை, கன்னடப்பாளையம், பம்மல் விஸ்வேசபுரம், மாடம்பாக்கம் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இந்த கிடங்குகளில், மலைப்போல் குப்பை தேங்கி, தொடர்ந்து கொட்ட இடமில்லாத சூழல் நிலவுகிறது. அதேபோல், துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகரித்து, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், இந்த மூன்று கிடங்குகளையும், நேற்று ஆய்வு செய்தார்.
குப்பை மலையாக உருவெடுத்திருப்பதை பார்த்த அவர், ஒவ்வொரு மண்டலத்திலும் குப்பை கொட்டுவதற்கு மாற்று இடத்தை தயார் செய்யும்படி, நகரமைப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மாநகராட்சியின் 70 வார்டுகளில் ஏகப்பட்ட அரசு நிலங்கள் உள்ளன. அவை அரசியல்வாதிகளின் பிடியிலும், ஆக்கிரமிப்பிலும் உள்ளன. ஓ.எஸ்.ஆர்., நிலங்களும் அதிகளவில் உள்ளன.
நகரமைப்பு அதிகாரிகள், ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்தாலே, ஏகப்பட்ட அரசு நிலங்கள் கண்டறியப்படும். ஆனால், அவர்கள் கண்டுகொள்வதில்லை. குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, மாற்று இடங்களை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

