/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
80 உணவகங்களுக்கு 'கிடுக்கி' தயாராகுது மாநகராட்சி
/
80 உணவகங்களுக்கு 'கிடுக்கி' தயாராகுது மாநகராட்சி
ADDED : மார் 06, 2025 11:58 PM
சென்னையில் போக்குரவத்து நெரிசல் அதிகரிக்க, 'பார்க்கிங்' வசதியில்லாத, 80 உணவகங்கள்தான் காரணம்; அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாநகராட்சிக்கு, சென்னை காவல் துறை பரிந்துரை செய்துள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 'யு டர்ன்' வசதி உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை, போக்குவரத்து போலீசார் செய்து வருகின்றனர்.
ஆனாலும், சிற்றுண்டி கடைகள், போதுமான வாகன நிறுத்தம் இன்றி செயல்படும் உணவகங்களும்தான், நெரிசலுக்கு காரணம் என்பது, கள ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில், போதிய வாகன நிறுத்தம் இன்றி செயல்படும் உணவகங்கள் பட்டியல், மண்டல வாரியாக எடுக்கப்பட்டன.
இதில், 80 உணவகங்கள் போதுமான வாகன நிறுத்தம் இன்றி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டு உள்ளது.
அந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகராட்சிக்கு, சென்னை காவல் துறை, பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பான கடிதத்தில், உணவகங்கள், அவற்றின் தன்மை, இருக்க வேண்டிய வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது.
- நமது நிருபர் -