/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.டி.எச்., சாலையில் நடைபாதை பணியை துவக்கியது மாநகராட்சி
/
எம்.டி.எச்., சாலையில் நடைபாதை பணியை துவக்கியது மாநகராட்சி
எம்.டி.எச்., சாலையில் நடைபாதை பணியை துவக்கியது மாநகராட்சி
எம்.டி.எச்., சாலையில் நடைபாதை பணியை துவக்கியது மாநகராட்சி
ADDED : மே 30, 2024 12:25 AM

வில்லிவாக்கம், அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம், 94 மற்றும் 95வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எம்.டி.எச்., சாலை உள்ளது.
இச்சாலை, பாடி மேம்பாலத்தில் துவங்கி, ஐ.சி.எப்., அருகே உள்ள கொன்னுர் நெடுஞ்சாலையில் இணைகிறது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை 3 கி.மீ., துாரம் உடையது. ஆனால், பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலேயே இருந்தது.
சாலை முழுதும் பல்வேறு பணிகளுக்கான பள்ளங்கள் தோண்டப்பட்டு, முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், ஆங்காங்கே 'பேட்ஜ் ஒர்க்' செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து நம் நாளிதழில் பலமுறை சுட்டிக்காட்டிய பின், எம்.டி.எச்., சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டன. தற்போது, புதிய சாலை அமைக்கப்பட்ட இருபுறத்திலும், புதிய நடைபாதைகள் அமைக்க, மாநகராட்சியின் பேருந்து சாலை துறை திட்டமிட்டது.
அதற்காக, நேற்று முன்தினம் முதல் பணிகள் துவங்கின. முதற்கட்டமாக, ஐ.சி.எப்., சிக்னல் துவங்கி, கள்ளுக்கடை பேருந்து நிறுத்தம் வரை பள்ளம் தோண்டப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
விரைவில், இருபுறங்களும் நடைபாதைகள் அமைக்கப்பட்டு, பாதசாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.