/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடைந்து விழும் நிலையில் சுடுகாடு சுற்றுச்சுவர்
/
உடைந்து விழும் நிலையில் சுடுகாடு சுற்றுச்சுவர்
ADDED : மே 11, 2024 12:13 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலத்தில், அம்பேத்கர் நகர் சுடுகாடு உள்ளது. சேலையூர், பாரத் நகர், எம்.ஜி.ஆர்., நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்துகின்றனர்.
பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக கட்டப்பட்டுள்ள, இதன் சுற்றுச்சுவர் உடைந்து விழும் நிலையில் சாய்ந்துக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் விழும் என்ற சூழல் உள்ளது. ஏற்கனவே, அதே தெருவில் சில மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, சேதமடைந்த இடங்களில் இடித்துவிட்டு, புதிய சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுடுகாட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த சுற்றுச்சுவர் பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை பணிகள் துவங்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, அம்பேத்கர் நகர் சுடுகாட்டை சுத்தம் செய்வதோடு, சேதமடைந்த இடங்களில் புதிய சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.