/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரப்பாதை அடிக்கடி சேதம் மாற்றுத்திறனாளிகள் கடும் அதிருப்தி
/
மரப்பாதை அடிக்கடி சேதம் மாற்றுத்திறனாளிகள் கடும் அதிருப்தி
மரப்பாதை அடிக்கடி சேதம் மாற்றுத்திறனாளிகள் கடும் அதிருப்தி
மரப்பாதை அடிக்கடி சேதம் மாற்றுத்திறனாளிகள் கடும் அதிருப்தி
ADDED : மே 22, 2024 12:36 AM

அண்ணா சதுக்கம், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாதை அடிக்கடி சேதமடைவதால், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், அலையில் நின்று கால் நனைத்தபடி கடல் அழகை ரசிக்கின்றனர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை ரசிக்க முடியாமலும், அலையில் கால் நனைக்க முடியாமலும் ஏங்கினர்.
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, மெரினா கடற்பகுதியில், பிரத்யேகமாக மரப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தமிழக அரசு உத்தரவின்படி, மாநகராட்சி சார்பில் நிரந்தர மரப்பாதை அமைக்கப்பட்டது.
இந்த மரப்பாதையில், மாற்றுத்திறனாளிகள் சென்று கடல் அழகை ரசிக்கும்படி அமைக்கப்பட்டது.
ஆனால், கால் நனைக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதன் பிறகு, மரப்பாதையை சற்று விரிவாக்கம் செய்து, அலையில் கால் நனைத்து ரசிக்கும்படி வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மரப்பாதையை, பொதுமக்கள் பலரும் பயன்படுத்த துவங்கினர். மாண்டஸ் புயலில் மரப்பாதை முற்றிலும் சேதமடைந்தது.
அதன் பிறகு, மரப்பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும், அடிக்கடி இந்த மரப்பாதை சேதமடைந்து வருகிறது. தற்காலிகமாகவே, மரப்பாதையை சீரமைத்து வருகின்றனர்.
எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

