/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி மோதி மாணவர் பலி 'ரிசல்ட்' வரும் முன் விபரீதம்
/
லாரி மோதி மாணவர் பலி 'ரிசல்ட்' வரும் முன் விபரீதம்
லாரி மோதி மாணவர் பலி 'ரிசல்ட்' வரும் முன் விபரீதம்
லாரி மோதி மாணவர் பலி 'ரிசல்ட்' வரும் முன் விபரீதம்
ADDED : மே 11, 2024 12:16 AM

மதுரவாயல்,
சென்னை, மதுரவாயல் தனலட்சுமி நகரில் வசித்து வந்தவர் ஜீவா, 15. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.
நேற்று காலை பைக்கில், அருகில் வசிக்கும் தாத்தாவிற்கு உணவு எடுத்துச் சென்றார்.
மதுரவாயல் பாலத்தின் கீழே சென்ற போது, லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ஜீவா, படுகாயமடைந்து அங்கேயே பலியானார். தகவலின்படி வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஜீவாவின் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். தப்பிச் சென்ற ஓட்டுனர் சீனிவாசன், 42, மதுரவாயல் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.