/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவலர் குடியிருப்பில் வசதிகள் மோசம்
/
காவலர் குடியிருப்பில் வசதிகள் மோசம்
ADDED : மே 13, 2024 01:42 AM
சென்னை:புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில் அருகே உள்ள காவலர் குடியிருப்பில், 140 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு வசிப்போர் சுகாதாரமற்ற சூழ்நிலையிலும், பாதுகாப்பு இன்றியும் வசித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
காவலர் குடியிருப்பில் வசிப்போர் கூறியதாவது:
பாதாள சாக்கடை அடைப்பு என்றாலும் சரி, குடிநீர் இல்லை என்றாலும் சரி, அனைத்திற்கும் பணம் கொடுத்து தான் சீரமைத்து கொள்ள வேண்டி உள்ளது.
மேலும், சிறு சிறு திருட்டு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஈடுபடுவோர் யார் என்பது குறித்து கண்டறிய, இங்கு 'சிசிடிவி' கேமராவும் அமைக்கப்படவில்லை.
இப்படி எந்த ஒரு வசதியும் செய்து தரப்படுவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.