ADDED : ஆக 31, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுாரைச் சேர்ந்தவர் வேலு, 48; விவசாயி.
இயற்கை உபாதை கழிக்க, அப்பகுதி வயல்வெளிக்கு, நேற்று முன்தினம் காலை சென்றார். மதியம் வரை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை தேடினர்.
அப்போது, வயல்வெளியில் வேலு உயிர் இழந்து கிடந்தார். அவரது மனைவி விசாலாட்சி புகாரின்படி, பெருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுவுக்கு, அடிக்கடி வலிப்பு நோய் வருமெனவும், சம்பவ நாளன்று வலிப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.