/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணனை பழி வாங்க வந்து தம்பியை வெட்டி கொன்ற கும்பல்
/
அண்ணனை பழி வாங்க வந்து தம்பியை வெட்டி கொன்ற கும்பல்
அண்ணனை பழி வாங்க வந்து தம்பியை வெட்டி கொன்ற கும்பல்
அண்ணனை பழி வாங்க வந்து தம்பியை வெட்டி கொன்ற கும்பல்
ADDED : ஜூன் 13, 2024 12:18 AM

கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகரை சேர்ந்த சகோதரர்கள் சூர்யா, 28, தர்மா, 24. இவர்களில் சூர்யா, ரவுடியாக வலம் வந்துள்ளார்.
தண்டையார் பேட்டை, நேரு நகரை சேர்ந்த ரவுடி ஜெகன், 23 என்பவருக்கும், சூர்யாவுக்கும் இடையே, யார் பெரிய ஆள் என்பதில் போட்டி ஏற்பட்டது. கடந்த ஆண்டில் இருவருக்கும் ஏற்பட்ட மோதலின் போது, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் சமரசம் பேசி, இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சூர்யாவின் தம்பி, தர்மா தன் நண்பர் கிஷோர் என்பவருடன் கருமாரியம்மன் நகர் ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் மது குடித்து கொண்டிருந்தார்.
அங்கு ஜெகன் தன் கூட்டாளிகள் நான்கு பேருடன், சூர்யாவை தேடி வந்துள்ளார். அங்கு சூர்யா இல்லாததால், தர்மாவுடன் தகராறு செய்துள்ளார். மோதல் முற்றியதில், மறைத்து வைத்திருந்த கோடாரி, கத்தியால் தர்மாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ஐந்து முறை குத்தியதில் ரத்த வெள்ளத்தில் தர்மா சரிந்தார். தடுக்க வந்த கிஷோருக்கும் வெட்டு விழுந்தது.
இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தர்மா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வழக்கில், ஜெகன், 23, அவரது கூட்டாளி கேசவன், 19 ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பாலாஜி, 24, தமிழ்செல்வன், 22, சீனிவாசன், 19 ஆகியோரை தேடி வருகின்றனர்.
கடந்த 10ம் தேதி, கொருக்குப்பேட்டையில் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் அதே பகுதியில் மற்றொரு கொலை சம்பவம் நடந்துள்ளது, அப்பகுதியினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.