/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீலிங் பேன் விழுந்து சிறுமி காயம்
/
சீலிங் பேன் விழுந்து சிறுமி காயம்
ADDED : ஆக 05, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலம்பாக்கம்,மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம், கணபதி நகரைச் சேர்ந்தவர் விநாயகம். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் 3 வயது மகள் பிரனிகா மற்றும் குடும்பத்தினருடன், அதே பகுதியில் உள்ள சிலோன் பரோட்டா கடைக்கு சாப்பிட சென்றார்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஹோட்டலில் இருந்த சீலிங் பேன் கழன்று, எதிர்பாராத விதமாக குழந்தை பிரனிகா தலையில் விழுந்தது. இதில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை சேர்த்தனர். அங்கு, குழந்தையின் தலையில் நான்கு தையல் போடப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.