/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியின் பெற்றோருக்கு கொடுமை தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை
/
சிறுமியின் பெற்றோருக்கு கொடுமை தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை
சிறுமியின் பெற்றோருக்கு கொடுமை தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை
சிறுமியின் பெற்றோருக்கு கொடுமை தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை
ADDED : செப் 11, 2024 12:34 AM
சென்னை,
மகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க சென்ற பெற்றோரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து புகார் அளிக்க அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, தங்களை இன்ஸ்பெக்டர் தாக்கியதாகவும், வாலிபரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் பேசிய வீடியோ வெளியானது. ஆனால், போலீஸ் தரப்பில் இது மறுக்கப்பட்டது.
இதுதொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்க, வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.