/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அபாய நிலையில் வடிகால் மூடி நெடுஞ்சாலை துறை அலட்சியம்
/
அபாய நிலையில் வடிகால் மூடி நெடுஞ்சாலை துறை அலட்சியம்
அபாய நிலையில் வடிகால் மூடி நெடுஞ்சாலை துறை அலட்சியம்
அபாய நிலையில் வடிகால் மூடி நெடுஞ்சாலை துறை அலட்சியம்
ADDED : ஜூன் 10, 2024 02:21 AM

சென்னை:சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையை, நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இச்சாலையில் ஆயிரம்விளக்கு பகுதியில் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் மூடி சிதிலமடைந்து, முற்றிலுமாக உடைந்து காணப்படுகிறது.
அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கையை, நெடுஞ்சாலை துறையினர் இதுநாள் வரை மேற்கொள்ளவில்லை.
இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவதோடு, கார்களும் சேதமடைந்து வருகின்றன.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், நெடுஞ்சாலை அலட்சியமாக செயல்பட்டு வருவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
எனவே, உயிரிழப்பு ஏற்படும் முன், நெடுஞ்சாலை துறையினர் மழைநீர் வடிகால் மூடிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆயிரம்விளக்கு பகுதி மக்கள் கூறுகையில்,'சில இடங்களில் விபத்து ஏற்பட்டதை அடுத்து, தற்காலிகமாக விபத்தை தடுக்கும் விதமாக கற்களை போட்டு வைத்துள்ளோம்' என்றனர்.