/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடனை திருப்பி தராத ஆத்திரம் நண்பரை தாக்கியவர் கைது
/
கடனை திருப்பி தராத ஆத்திரம் நண்பரை தாக்கியவர் கைது
கடனை திருப்பி தராத ஆத்திரம் நண்பரை தாக்கியவர் கைது
கடனை திருப்பி தராத ஆத்திரம் நண்பரை தாக்கியவர் கைது
ADDED : மே 11, 2024 12:09 AM
அம்பத்துார், சென்னை, சூளைமேடு, கான் தெருவைச் சேர்ந்தவர் நவீன்குமார், 27. இவரும், அண்ணா நகரைச் சேர்ந்த விக்னேஷ், 25, என்பவரும், கூட்டாக 'யு டியூப்' சேனல் நடத்தி வந்தனர்.
அதில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய, நவீன்குமார் தன் நண்பர் விக்னேஷிடம், 18,000 ரூபாய் கடன் வாங்கினார்.
இரண்டு மாதமாக வட்டி மற்றும் அசல் பணத்தை திருப்பிக் கொடுக்காமல், நவீன்குமார் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த விக்னேஷ், 8ம் தேதி தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, நவீன்குமாரை ஆட்டோவில் கடத்திச் சென்று, பணம் கேட்டு சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின் தகவல் அறிந்த நவீன்குமாரின் பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, அவர்கள், ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் செய்தனர்.
விசாரித்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, விக்னேஷ் அவரது நண்பர்களான ெஷனாய் நகரைச் சேர்ந்த பழைய குற்றவாளியான கோபிநாத், 28, மற்றும் சஞ்சய், 21, ஆகியோரை கைது செய்தனர்.
ஆட்டோவுடன் தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர்.