ADDED : ஆக 15, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மந்தைவெளி, வி.சி., கார்டன், 1வது தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன், 21. இவர் மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு மகன். இவர், நேற்று காலை மகேந்திரா காரில் வேளச்சேரி - தரமணி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 'ஹூண்டாய் சாண்ட்ரோ' கார் அவரது காரில் உரசியதை தட்டிக் கேட்டுள்ளார். இதில், சான்ட்ரோ கார் ஓட்டுனர் அரவிந்தனை அடித்து நிற்காமல் சென்றுவிட்டார்.
தரமணி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ், 34, என்பவர் அவரை தாக்கியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.