/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அக்கா கணவரிடம் நில மோசடி செய்தவர் கைது
/
அக்கா கணவரிடம் நில மோசடி செய்தவர் கைது
ADDED : ஜூன் 12, 2024 12:29 AM

ஆவடி, பூந்தமல்லி அடுத்த மாங்காடு, மலையம்பாக்கம், ரஹமத் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 54.
இவர் ஏப்., 5ல் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கூறியிருந்தததாவது:
பூந்தமல்லி, லட்சுமிபுரம், வட அக்ரஹாரத்தில் 5497 சதுர அடி நிலத்தை, 1998ல் வாங்கினேன்.
இந்நிலையில், மூன்று வீடுகள் கொண்ட குடியிருப்பை கட்டி, அதில் ஒரு வீடு மற்றும் 14 லட்சம் ரூபாய் தருவதாக, என் மனைவியின் தம்பி ஜெயகார்த்தி என்பவர் ஆசை வார்த்தை கூறினார்.
அதன்படி, 1,038 சதுர அடி நிலத்தை ஜெயகார்த்தி பெயருக்கு பொது அதிகாரம் கொடுத்தேன்.
ஆனால், ஜெயகார்த்தி எனக்கு தெரியாமல் நான்கு வீடுகள் கட்டி, மூன்று வீடுகளை விற்றுள்ளார்.
மேலும், எனக்கு தர வேண்டிய ஒரு வீடு மற்றும் 14 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றினார். அதன் மொத்த மதிப்பு 70 லட்சம் ரூபாய்.
இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த திருவெங்கடபுரம், வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெய கார்த்தி, 43, என்பவரை நேற்று கைது செய்தனர்.