/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவரை இழந்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
/
கணவரை இழந்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
ADDED : ஆக 02, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 55 வயது பெண், கணவரை இழந்து, வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது பக்கத்து தெருவில் குடியிருப்பவர் பாலு, 45. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளன.
நேற்று முன்தினம், கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த பாலு, கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நேற்று, பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.