/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூலித் தொழிலாளியை பாட்டிலால் குத்தியவர் கைது
/
கூலித் தொழிலாளியை பாட்டிலால் குத்தியவர் கைது
ADDED : ஆக 15, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கண்ணகிநகர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக், 36; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, பெரியமேடு ஈ.வி.ஆர்., சாலையிலுள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார்.
அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர், கார்த்திக்கிடம் வீண் தகராறு செய்துள்ளார். அத்துடன், கீழே கிடந்த காலி பீர் பாட்டிலை உடைத்து, கார்த்திக் முகத்தில் குத்திவிட்டு தப்பியுள்ளார்.
காயமடைந்த கார்த்திக், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்படி, சம்பவத்தில் ஈடுபட்ட, பெரியமேடு பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ், 22, என்பவரை, பெரியமேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.