/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணின் முகத்தை பிளேடால் கிழித்தவர் கைது
/
பெண்ணின் முகத்தை பிளேடால் கிழித்தவர் கைது
ADDED : ஆக 08, 2024 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்,
புழல், காவாங்கரையைச் சேர்ந்த 34 வயது பெண், கணவனை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து வீட்டிற்கு நடந்து சென்றார். வழியில் அப்பெண்ணை மறித்த புழல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 35, என்பவர் ஆபாசமாக பேசி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில், கண்ணன் மறைத்து வைத்திருந்த பிளேடால் அப்பெண்ணின் முகத்தில் சரமாரியாக கிழித்து தப்பிச் சென்றார். புழல் போலீசார், கொலை முயற்சி வழக்கில் கண்ணனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.