/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுரங்கம் தோண்டும் 'காவிரி' இயந்திரம் அடையாறு சந்திப்பை இம்மாதம் கடக்கும்

ADDED : ஜூலை 01, 2024 01:18 AM
சென்னை:சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116 கி.மீ., துாரத்தில் மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒரு வழித்தடம் மாதவரம் - சிறுசேரி 'சிப்காட்' வரை 45.4 கி.மீட்டரில் அமைகிறது.
பசுமை வழிச்சாலை பகுதியில் இருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.226 கி.மீ., துாரத்திற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த ஆண்டு பிப்., 16ல் துவங்கியது.
'காவிரி' மற்றும் 'அடையாறு' என்ற பெயருடைய, இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த இயந்திரங்கள், டி.பி.சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க., பாலம் அருகே அடையாறு ஆற்றை, அடுத்தடுத்து கடந்துள்ளன.
மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான காவிரி, மொத்தம் 1.226 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். தற்போது வரை 990 மீட்டரில் பாதையை தோண்டியுள்ளது.
இந்த இயந்திரம் அடையாறு சந்திப்பை நோக்கி, சீரான வேகத்தில் நகர்கிறது. இம்மாதம் 2வது வாரத்தில், அடையாறு சந்திப்பை அடையும். 'அடையாறு' இயந்திரம், அதன் பணியை தொடர்ந்து செய்துவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.