/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மட்டம் உயர்ந்த புதிய சாலை வீடுகளில் புகுந்தது வெள்ளம்
/
மட்டம் உயர்ந்த புதிய சாலை வீடுகளில் புகுந்தது வெள்ளம்
மட்டம் உயர்ந்த புதிய சாலை வீடுகளில் புகுந்தது வெள்ளம்
மட்டம் உயர்ந்த புதிய சாலை வீடுகளில் புகுந்தது வெள்ளம்
ADDED : ஜூன் 18, 2024 12:28 AM
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., நகர் 138வது வார்டில், எம்.எம்.ராமசாமி தெரு உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இது, 10 அடி அகலம் கொண்ட தெரு என்பதால், மழைநீர் வடிகால் இல்லை. சமீபத்தில் சாலை அமைக்கும் போது, சாலையின் மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால், பல வீடுகள் பள்ளத்தில் உள்ளன. இதையடுத்து, சில நாட்களாக சென்னையில் பெய்த மழையில், அப்பகுதியில் மழைநீர் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இதனால், பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை மழைக்கு தண்ணீர் தேங்காத இடத்தில், புது சிமென்ட் சாலை அமைத்து, அதன் மட்டம் உயர்ந்துள்ளதால், அந்த இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால், சாலை மட்டம் அதிகரிப்பால் தண்ணீர் தேங்குவதாக, பகுதிமக்கள் குற்றம்சாட்டினர். எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.