ADDED : செப் 18, 2024 12:40 AM
சென்னை, ஆயிரம்விளக்கு, மாடல் பள்ளி சாலையைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 66. அவருக்கு வனரோஜா, 40 என்ற மகளும், தினேஷ்குமார், 35 என்ற மகனும் உள்ளனர்.
பன்னீர் செல்வம் தினமும் இரவு நேரங்களில், வீட்டிற்கு அருகே உள்ள தங்கும் விடுதியின் வாகன நிறுத்தத்தில் உறங்குவது வழக்கம். கடந்த 14ம் தேதி, அங்கு இறந்து கிடந்தார். அவர் இயற்கையாக இறந்துவிட்டார் என நினைத்து, அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை உறவினர்கள் மேற்கொண்டனர்.
அப்போது, அவரது காதில் இருந்து ரத்தம் வடிந்திருந்ததை பார்த்து சந்தேகம் ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர்.
அதில், தங்கும் விடுதி அருகே திரும்பிய மாருதி சுசுகி கார் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
அவரது உறவினர்கள் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.