ADDED : மே 22, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி,வியாசர்பாடி, ஜெகஜீவன்ராம் நகரைச் சேர்ந்தவர் முருகேசன், 68; சுமை துாக்கும் தொழிலாளி. நேற்று வேலை முடிந்து, வியாசர்பாடி, பேசின்பாலம் சாலை வழியாக சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த நால்வர் கும்பல், முதியவர் முருகேசனை வழிமறித்து கையால் பயங்கரமாக தாக்கியது.
சட்டை பையில் இருந்த, 6,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை திருடி சென்றது. இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

