/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை முட்டிய எருமையின் உரிமையாளர் கைது
/
பெண்ணை முட்டிய எருமையின் உரிமையாளர் கைது
ADDED : ஜூன் 22, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர், அம்சா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமதி, 33. கடந்த, 16ம் தேதி உறவினர் வீட்டில் இருந்த தன் குழந்தைகளுக்கு, மதுமதி சாப்பாடு எடுத்துச் சென்றார்.
அப்போது, கிராமத்தெரு, சோமசுந்தரம் நகர் சந்திப்பில், தறிகெட்டு ஓடிவந்த எருமை மாடு முட்டி படுகாயமடைந்தார்.
திருவொற்றியூர் போலீசார் விசாரித்து, எருமையின் உரிமையாளர்களான, திருவொற்றியூரைச் சேர்ந்த கோட்டீஸ்வரராவ், 51, அவரது மகன் வெங்கட சாய், 28, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.