/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.79 லட்சத்தில் பூங்கா கண்ணகி நகரில் தயார்
/
ரூ.79 லட்சத்தில் பூங்கா கண்ணகி நகரில் தயார்
ADDED : ஆக 12, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகி நகர்:சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, எழில்நகரில் 13,611 சதுர அடி பரப்பு திறந்தவெளி இடம் உள்ளது.
இதில், விளையாட்டு மைதானத்துடன் கூடிய பூங்கா அமைக்க, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 79 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஒதுக்கியது. இதில், பூங்கா, யோகா மேடை, கூடைப்பந்து, கபடி, உடற்பயிற்சி கூடம், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய, ஒருங்கிணைந்த பூங்கா அமைக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்து, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.