/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நோயாளியுடன் வந்தவருக்கு கத்திக்குத்து
/
நோயாளியுடன் வந்தவருக்கு கத்திக்குத்து
ADDED : ஆக 01, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,புரசைவாக்கம், பிரிக்ளின் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 31. இவரது பாட்டியின் சிகிச்சைக்காக, அவரை அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். வார்டு எண்: 12ல் வரிசையில் நிற்காமல் முன்னே சென்றதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர் சத்யானந்தம், 48, அவரை தடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், சத்யானந்தம் 'சர்ஜிக்கல்' கத்தியால் மணிகண்டனின் முதுகில் குத்தி உள்ளார். போலீசார் சத்யானந்தத்தை கைது செய்தனர்.