/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகை வீட்டை 'லீசு'க்கு விட்டவர் கைது
/
வாடகை வீட்டை 'லீசு'க்கு விட்டவர் கைது
ADDED : மே 03, 2024 12:42 AM

ஆவடி, சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரம், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராம் பிரசாத், 48. இவர், கடந்த மார்ச் 25ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
சென்னை, மதனந்தபுரம், ராஜேஸ்வரி நகரில் உள்ள தனியார் குடியிருப்பின் பொறுப்பாளராக உள்ளேன். மேற்கண்ட வீட்டை வாடகைக்கு விட, 'ரியல்ட்டி மாங்க்' என்ற நிறுவனத்தின் மேலாளர் ஹரிஷ் குமார், கடந்த 2018 ல், மூன்று ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார்.
பின், அந்த வீட்டை, 2019 முதல்'ரியல்ட்டி மாங்க்' நிறுவனம் வாயிலாக அக்ஷிகா என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் பெற்று ஹரிஷ் குமார் லீசுக்கு விட்டுள்ளார்.
இதனால், மாத வாடகை 23,400 பணத்தை கொடுக்காமல் ஹரிஷ் குமார் ஏமாற்றி வருகிறார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதன்மீது, வழக்குப்பதிவு செய்த மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி, தலைமறைவாக இருந்த சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஹரிஷ் குமார், 38 என்பவரை நேற்று காலை கைது செய்தார்.