/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சிலம்பாட்ட வீரர்கள் அசத்தல்
/
சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சிலம்பாட்ட வீரர்கள் அசத்தல்
சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சிலம்பாட்ட வீரர்கள் அசத்தல்
சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சிலம்பாட்ட வீரர்கள் அசத்தல்
ADDED : ஏப் 23, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூரில் யுத்த வர்ம சிலம்ப போர் கலை அகாடமி விளையாட்டு சங்கம் சார்பில், புதுவண்ணாரப்பேட்டை, துறைமுக பொறுப்பு கழக விளையாட்டு திடலில் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், 17 மாவட்டங்களைச் சேர்ந்த 4 வயது முதல் 53 வயது வரை உள்ள 750 பேர் பங்கேற்று, தமிழகம் வரைபடத்தை போல நின்று, இரண்டு மணி நேரம் சிலம்பம் சுழற்றி 'கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
காமராஜ் துறைமுக தலைமைச் செயலர் சிந்தியா, போட்டியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கும், சிலம்பப் பயிற்சியாளர்களுக்கும் சான்றிதழையும், பரிசுகளையும் வழங்கினார்.