/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மால், திருமண மண்டபங்களால் தொடரும் நெரிசல் போக்குவரத்து சீர்செய்வதில் விழிபிதுங்கும் போலீசார்
/
மால், திருமண மண்டபங்களால் தொடரும் நெரிசல் போக்குவரத்து சீர்செய்வதில் விழிபிதுங்கும் போலீசார்
மால், திருமண மண்டபங்களால் தொடரும் நெரிசல் போக்குவரத்து சீர்செய்வதில் விழிபிதுங்கும் போலீசார்
மால், திருமண மண்டபங்களால் தொடரும் நெரிசல் போக்குவரத்து சீர்செய்வதில் விழிபிதுங்கும் போலீசார்
ADDED : ஜூலை 02, 2024 01:22 AM

அம்பத்துார், --
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்துார், மாதவரம் மண்டலங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கொரட்டூர் பாடி மேம்பாலம் முதல் அம்பத்துார் ராம் நகர் சந்திப்பு வரையிலான, சென்னை - -திருத்தணி நெடுஞ்சாலை, அம்பத்துார் முதல் புழல் வரையிலான அம்பத்துார்- - செங்குன்றம் சாலை.
ஆக்கிரமிப்பு
அதேபோல, மாதவரம் மண்டலத்தில், மூலக்கடை சந்திப்பு முதல் மாதவரம் பழைய பேருந்து நிலையம் வரையிலான மாதவரம் நெடுஞ்சாலை, கொளத்துார் ரெட்டேரி சந்திப்பு முதல் புழல் விநாயகபுரம் வரையிலான ரெட்ஹில்ஸ் சாலை.
மேலும், புழல் மத்திய சிறை முதல் காவாங்கரை மீன் மார்க்கெட் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில், 50க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், மீன் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.
அவற்றுக்கான, வாகன நிறுத்தங்கள் பெயரளவில் தான் உள்ளன. இதனால், அங்கு வந்து செல்வோர், தங்களது வாகனங்களை, மீண்டும் எடுக்க வசதியாக, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி விடுகின்றனர்.
அவற்றை, மேற்கண்ட நிறுவனங்களின் நிர்வாகத்தினரும் தங்களது ஆட்கள் மூலம் கட்டுப்படுத்துவதில்லை.
ஜி.என்.டி., சாலை
அதே போன்று, செங்குன்றம் ஜி.என்.டி., சாலை யின் அணுகு சாலையிலும், 10க்கும் மேற்பட்ட திருமணம் மண்டபங்கள், வணிக வளாகம் மற்றும் 'மால்' ஆகியவை உள்ளன. அவற்றிலும் போதிய அளவு வாகன நிறுத்தங்கள் இல்லை.
ஏற்கனவே, நடைபாதை கடைகளால் ஆக்கிரமிப்பில் சிக்கிய மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதி சாலைகள், மேற்கண்ட வாகன நிறுத்தம் ஆக்கிரமிப்பால், மேலும் குறுகி விடுகின்றன.
தொடரும் விதிமீறல்
மேலும், புதிதாக கட்டப்படும் வணிக வளாகங்களுக்கும் போதிய வாகன நிறுத்த வசதி இல்லை. நிர்வாக போட்டியால், வாகன ஆக்கிரமிப்புகளை, அந்தந்த பகுதி சட்டம் - -ஒழுங்கு போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், 'பீக் ஹவர்' வேளைகளில் தொடரும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர். மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து, நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.