/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை தீர்த்துக்கட்ட வந்த மூவரை மடக்கிய போலீசார்
/
வாலிபரை தீர்த்துக்கட்ட வந்த மூவரை மடக்கிய போலீசார்
வாலிபரை தீர்த்துக்கட்ட வந்த மூவரை மடக்கிய போலீசார்
வாலிபரை தீர்த்துக்கட்ட வந்த மூவரை மடக்கிய போலீசார்
ADDED : ஜூலை 06, 2024 12:41 AM
பேசின்பாலம், வாலிபரை தீர்த்துக்கட்டும் எண்ணத்துடன், ஒரு கும்பல் பட்டாக்கத்திகளுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனை நோக்கி ஆட்டோவில் செல்வதாக, பேசின்பாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் புளியந்தோப்பு, காந்தி நகர் சந்திப்பில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர்.
இதில், மூன்று பட்டாக்கத்திகளுடன் இருந்த சங்கர்பாய், 28, அஜித், 26, மற்றும் 17 வயது சிறுவனை மடக்கி, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் தெரிய வந்ததாவது:
ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலநரேந்திரன், 22. இவருக்கும், மேற்கண்டவர்களின் நண்பரான ஜோயல் என்பவருக்கும், ராயப்பேட்டையில் நடந்த பிறந்த நாள் விழாவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஜோயல், பாலநரேந்திரனை கத்தியால் வெட்டியுள்ளார்.
காயமடைந்த பாலநரேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். இந்த நிலையில், அவரை மருத்துவமனையில் வைத்தே கொலை செய்ய வேண்டும் என, ஜோயல் தன் கூட்டாளிகளான கரிமா, 'உடுக்கை' அருண், ஆகாஷ், சங்கர் பாய், அஜித் ஆகியோரை அழைத்து, ஆட்டோ மற்றும் பைக்கில் ஸ்டான்லியில் சிகிச்சை பெறும் பால நரேந்திரனை கொலை செய்ய சென்ற போது, ஆட்டோவில் சென்றவர்கள் போலீசில் சிக்கியது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், ஜோயல் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.