தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மீன் விலை குறையும்

மீன் விலை குறையும்

மீன் விலை குறையும்


ADDED : ஜூன் 15, 2024 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காசிமேடு, கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்., 13 முதல் ஜூன் 14 நள்ளிரவு வரை, 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

இந்தாண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. 50 சதவீத மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:

காசிமேட்டில், தலா 1,000த்திற்கும் மேற்பட்ட படகுகள் மூலம், மீன்பிடி தொழில் நடக்கிறது. தினமும், 1,000 டன் மீன் கொண்டு வரப்படுகின்றன. 50 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.

தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், மீன்பிடி வலைகள், சாதனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் படகில் சேகரித்து வைத்துள்ளோம்.காசிமேடில் 50 சதவீத விசைப்படகுகள் கடலுக்குள் செல்கின்றன. எனவே, வரும் வாரங்களில் மீன் தட்டுப்பாடு இருக்காது; மீன்விலையும் குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us