/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ ஓட்டுனரை வெட்டிய ரவுடிகள் கைது
/
ஆட்டோ ஓட்டுனரை வெட்டிய ரவுடிகள் கைது
ADDED : ஆக 09, 2024 12:21 AM
எண்ணுார், எண்ணுார், வ.உ.சி., நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சிவா, 30, என்பவர், நேற்று முன்தினம் இரவு, தாழங்குப்பம் ஆற்றுப்பகுதியில் தனது நண்பர்களான கிஷோர் மற்றும் வினோத் ஆகியோருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே குடிபோதையில் வந்த மூன்று வாலிபர்கள், அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சிவாவை தலையில் பலமாக வெட்டி விட்டு தப்பியோடினர். சிவாவை அவரது நண்பர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவருக்கு ஏழு தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த, எண்ணுார் போலீசார், சிவாவை வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடிகள், எண்ணுார், அன்னை சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்த சந்தோஷ், 33, அருண்குமார், 22, ரமேஷ், 24 ஆகிய மூன்று பேரையும் நள்ளிரவில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இவர்கள் மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.