/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வே சுரங்கப்பாதை பணி மந்தம் தோண்டிய பள்ளம் குளமான அவலம்
/
ரயில்வே சுரங்கப்பாதை பணி மந்தம் தோண்டிய பள்ளம் குளமான அவலம்
ரயில்வே சுரங்கப்பாதை பணி மந்தம் தோண்டிய பள்ளம் குளமான அவலம்
ரயில்வே சுரங்கப்பாதை பணி மந்தம் தோண்டிய பள்ளம் குளமான அவலம்
ADDED : மே 30, 2024 12:26 AM

சென்னை, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக விம்கோ நகர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை சுற்றி ஜோதி நகர், சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில், பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
ஏற்கனவே, இந்த பகுதியில் இருந்த ரயில்வே கேட் வாயிலாக தான் பேருந்து நிலையங்கள், மார்க்கெட், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்த கேட்டை அகற்றிவிட்டு, 5 கோடி ரூபாயில் புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்தாண்டு ஜனவரியில் துவக்கப்பட்டது.
ஆனால், பல மாதங்களாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், அவ்வப்போது பெய்த மழையால் சுரங்கப்பாதை குளமாக மாறியது.
இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் கூறியதாவது:
இங்குள்ள ரயில்வே கேட் நீக்கப்பட்டு, புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், தோண்டிய பள்ளம் அப்படியே உள்ளது. ஏற்கனவே பெய்த மழையால், குளம் போல் நீர் தேங்கியுள்ளது. இதனால், டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை, விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.