/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் மழைநீர் வடிகால் பணி உள்ளகரம், புழுதிவாக்கத்தில் அவதி
/
கிடப்பில் மழைநீர் வடிகால் பணி உள்ளகரம், புழுதிவாக்கத்தில் அவதி
கிடப்பில் மழைநீர் வடிகால் பணி உள்ளகரம், புழுதிவாக்கத்தில் அவதி
கிடப்பில் மழைநீர் வடிகால் பணி உள்ளகரம், புழுதிவாக்கத்தில் அவதி
ADDED : ஜூலை 11, 2024 12:28 AM

புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 185க்கு உட்பட்ட உள்ளகரம், வார்டு 186க்கு உட்பட்ட புழுதிவாக்கம் ஆகிய பகுதியில், வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து உள்ளகரம் பகுதிவாசிகள் கூறியதாவது:
புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதியில், ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள், மந்த கதியில் நடந்து வருகின்றன.
இங்கு என்.எஸ்.சி., போஸ் சாலையில், தனியார் மழலையர் பள்ளியை ஒட்டிய குடியிருப்பு பகுதியில், நான்கு மாதங்களுக்கு முன், மழைநீர் வடிகால் கட்டும் பணி துவங்கியது. ஆனால், இன்னும் அப்பணிகள் முடியவில்லை.
அப்பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், கட்டுமான கம்பிகள் வெளியே நீட்டியபடி உள்ளன.
இதனால் வீட்டை விட்டு வெளியேறும் பொதுமக்களும், நடந்து செல்லும் பாதசாரிகளும், கால்களில் கம்பி குத்தி காயமடைகின்றனர்.
தவிர முதியோர், குழந்தைகள், வடிகால் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. திறந்தவெளி கால்வாயில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியிருப்பதால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் தெருவிளக்குகளும் எரியாததால், இரவு நேரங்களில் பெரும் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.