/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோதலை துாண்டும் பதிவு பா.ஜ., நிர்வாகி கைது
/
மோதலை துாண்டும் பதிவு பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : ஜூன் 22, 2024 12:11 AM

நங்கநல்லுார், மத மோதலை துாண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, பா.ஜ., மாவட்ட செயலரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, நங்கநல்லுார், கன்னிகா காலனி, முதல் தெருவைச் சேர்ந்தவர் கோகுல்நாயுடு, 45. இவர் பா.ஜ., சென்னை கிழக்கு மாவட்ட செயலராக பொறுப்பு வகிக்கிறார்.
அவரது முகநுால் பக்கத்தில், மதமோதலை துாண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக, முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து, இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை தெற்கு போலீஸ் இணை கமிஷனர் ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, கோகுல் நாயுடு மீது மத மோதலை துாண்டும் வகையில் எழுதுவது, மத உணர்வுகளை துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, கைது செய்தனர். அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.