ADDED : ஜூலை 27, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாப்பூர், சாந்தோம், டுமிங்குப்பம் எதிரே கடற்கரையில், நேற்று மாலை 6:40 மணியளவில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவர் சுயநினைவின்றி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.