/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழி நெடுக கருவேல மரங்கள் 'சேப்டி' இல்லாத கோலடி சாலை
/
வழி நெடுக கருவேல மரங்கள் 'சேப்டி' இல்லாத கோலடி சாலை
வழி நெடுக கருவேல மரங்கள் 'சேப்டி' இல்லாத கோலடி சாலை
வழி நெடுக கருவேல மரங்கள் 'சேப்டி' இல்லாத கோலடி சாலை
ADDED : ஆக 05, 2024 01:12 AM

திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்டது பருத்திப்பட்டு --- கோலடி சாலை. இந்த சாலையில், மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், செங்கல் சூளை மற்றும் சிறு, குறு கடைகள் உள்ளன. ஆவடியில் இருந்து திருவேற்காடு, அயப்பாக்கம், அம்பத்துார், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சாலையின் ஒருபுறம் ஆவடி மாநகராட்சி; மறுபுறம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரி அமைந்தள்ளது.
ஒன்றரை கி.மீ., துாரமுள்ள இந்த சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. அதேபோல, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. அதேபோல மின் வளக்குகளும் பெரும்பாலானவை சேதமடைந்து உள்ளன.
வாகன ஓட்டிகள், சற்று தடுமாறினால் கூட பள்ளத்தில் இடறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மழை காலத்தில், சாலையில் திடீர் குட்டைகள் ஏற்படுகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் குட்டையை சுற்றி வரும் அவலம் ஏற்படுகிறது. பெரும்பாலான மின் விளக்குகளும் சேதமடைந்துள்ளன. மீதமுள்ள சில தெருவிளக்குகளையும் கருவேலம் மரங்கள் சூழ்ந்துள்ளன. இதனால், விபத்து உயிர்பலி அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், மக்கள் நலனை கருத்தில் வைத்து, மழைக்கு முன் சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.