தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வழிப்பறி திருடன் கைது

வழிப்பறி திருடன் கைது

வழிப்பறி திருடன் கைது


ADDED : மே 22, 2024 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வளசரவாக்கம், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கண்டகர் திலியர் ஓசேன், 25. இவர், வளசரவாக்கம் அன்பு நகர் முதலாவது தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த 20ம் தேதி அதிகாலை புது கட்டடத்தில் துாங்கிய போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், கண்டகர் திலியர் ஓசேனை எழுப்பி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பின், அவரை தாக்கி, அவரிடம் இருந்த 8,000 ரூபாயை பறித்துச் சென்றனர். இதுகுறித்து விசாரித்த வளசரவாக்கம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட, வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலையைச் சேர்ந்த விஜயகுமார், 21, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us