ADDED : மே 16, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், 45; ஆட்டோ ஓட்டுனர். நேற்று இரவு கஸ்துாரி பாய் காலனியில் வந்தபோது, மர்ம நபர்கள் இருவர் வழிமறித்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனரை அசிங்கமாக பேசி அடித்து உள்ளனர். கத்திமுனையில் 870 ரூபாய் பிடுங்கி சென்றனர்.
மேலும், 'போலீசில் புகார் அளித்தால் கொன்று விடுவோம்' என மிரட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து புளியந்தோப்பு போலீசில் முருகன் புகார் அளித்தார்.
விசாரணையில், புளியந்தோப்பைச் சேர்ந்த 'பிள்ளை' கார்த்திக், 32, மற்றும் 'கோட்டை' மணிகண்டன், 21, என்பதும், பழைய குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.