/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு கூரை இடிந்தது தாய், மகள் தப்பினர்
/
வீடு கூரை இடிந்தது தாய், மகள் தப்பினர்
ADDED : ஜூன் 01, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்,
அம்பத்துார் அடுத்த முகப்பேர் மேற்கு, பாரதிதாசன் முதல் தெருவைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 54.
தன் வீட்டின் கீழ் தளத்தில் இவர் வசிக்கும் நிலையில், இவரது மகள், ரீட்டா, 39, குடும்பத்தினருடன் மேல்தளத்தில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் கூரையுடன் இணைந்த வெளிப்பக்க, 'போர்டிகோ' தளம், திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டிற்குள் இருந்த எல்லம்மாள், ரீட்டா ஆகியோர், வீட்டின் உள்பக்கம் சிக்கி, வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்த அம்பத்துார் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, இருவரையும் காயமின்றி மீட்டனர்.
ஜெ.ஜெ., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.