ADDED : ஜூன் 27, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, கோவாவில் சமீபத்தில் நடந்தது. மலேஷியா, நேபாளம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து, போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில், 17, 18 வயது பெண்கள் பிரிவில், சென்னை, இ.சி.ஆர்., கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தாரணி என்பவர் பங்கேற்றார்.
அவர், டபுள் ஸ்டிக் பிரிவில் முதல் பரிசும், மான்கொம்பு பிரிவில் இரண்டாம் பரிசும், தொடுமுறை பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றார்.
பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு மாணவியான இவரை, கல்லுாரி முதல்வர் தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் பாராட்டினர்.