ADDED : ஜூன் 23, 2024 04:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:
படப்பை அருகே வைப்பூர் அடுத்த கூழங்கல்சேரி பகுதியில் தெருவீதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி தனசேகரன், 51, என்பவர், வழக்கம்போல நேற்று காலை கோவிலை திறந்து பூஜை செய்ய சென்றார்.
அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு குத்துவிளக்குகள், ஒரு காமாட்சி அம்மன் விளக்கு, பித்தளை குடம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிந்த போலீசார் தடயங்களை சேகரித்து, கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.