ADDED : ஜூன் 18, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடில், தொடர்ந்து குற்றச்செயல்கள் அரங்கேறி வந்தன.
இதனால், குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், போலீசாருக்கு 'மூன்றாவது கண்'ணாக இருந்து உதவும், 'சிசிடிவி' எனும் கண்காணிப்பு கேமராக்களை, சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை மாநகராட்சி முழுதும் அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
ஆனால், அதன்பின் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால், பராமரிப்பின்றி தலை தொங்கியபடியும், காட்சிப் பொருளாகவும் மாறி உள்ளன. பல இடங்களில் திருட்டு போயுள்ளன.
இவற்றை முறையாக பராமரித்தாலே, குற்ற சம்பவங்கள் பெருமளவு குறையும். இதற்கு, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.