ADDED : மே 04, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர் அண்ணா நகர், 'ஒய் பிளாக்' முதலாவது தெருவில், ஐந்து தளம் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது முஸ்தான், 50, அவரது உறவினர்கள் கட்டட தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, முகமது முஸ்தான் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் மது அருந்திவிட்டு, முதலாவது தளத்தில் துாங்கியுள்ளனர்.
அப்போது, போதையில் எழுந்து சென்ற முகமது முஸ்தான், எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அண்ணா நகர் போலீசார், அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.